டெங்கு நோயினால் இதுவரை 310பேர் உயிரிழப்பு

கடந்த பத்து ஆண்­டு­களில் டெங்கு நோயின் ஆதிக்கம் இருந்­ததை விடவும் இரண்டு மடங்கு அதி­க­ரிப்பு வேகம் இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான ஏழு மாத­கா­லத்தில் காணப்­ப­டு­வதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டில் இது­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் மாத்­திரம் ஒரு இலட்­சத்து 13 ஆயி­ரத்து 543 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளதாகவும் அதேபோல் இந்த ஆண்டில் 310 பேர் டெங்கு நோயினால் உயி­ரி­ழந்­துள்­ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலத்­திற்குள் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் எண்ணிக்கை 24ஆயி­ரத்து 600 ஆக உயர்­வ­டைந்­துள்­ளதுடன், மேல் மாகா­ணத்தில் டெங்கு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. கொழும்பில் நக­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தியில் மாத்­திரம் இது­வ­ரையில், 3 ஆயி­ரத்து 688 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் நாட்டின் சகல பாட­சா­லை­க­ளையும் துப்­பு­ரவு செய்யும் பணிகள் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­ம் நிலையில், நாட்டின் சகல பகு­தி­க­ளிலும் வீடுகள், காணிகள், அலு­வ­ல­கங்கள் அனைத்­தையும் சோதனை செய்யும் நட­வ­டிக்­கை­களை சுகா­தார துறை­யினர் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

கடந்த ஒரு மாதத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட சோத­னை­களின் போது சுற்­றுச்­சூ­ழலை அசுத்­த­மாக வைத்­தி­ருந்த 4500 க்கும் அதி­க­மான நபர்கள் மீது நட­வ­டிக்­கை­களை எடுக்­கப்­பட்­டுள்­ளன. 3 ஆயிரம் வழக்­குகள் பதி­யப்­பட்­டுள்­ளன. மேல் மாகா­ணத்தில் டெங்கு நுளம்பு பர­வு­வ­தற்கு ஏது­வாக சூழலை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் 459 பேருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது.

கடந்த 27 ஆம் திகதி முதல் மேல் மாகா­ணத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரு நாட்­க­ளுக்­கான டெங்கு ஒழிப்பு வேலைத் திட்­டத்­திற்கு அமைய இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. நேற்­றுடன் நிறை­வ­டைந்த இந்த வேலைத் திட்­டத்தில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்­தி­ருந்த 730 இடங்கள் இனங்­கா­ணப்­பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்­நி­லையில், புத்­தளம், மாத்­தளை, உக்­கு­வெல, பதுளை மற்றும் ஹாலி எல ஆகிய பகு­தி­களின் சில இடங்­களில் டெங்கு நோயா­ளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது. சுகாதார அமைச்சும் பாதுகாப்பு தரப்பும் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன் சர்வதேச நாடுகளின் மருந்து மற்றும் நிவாரண உதவிகளும் அரசாங்கத்திற்கு கிடைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]