டெங்கு நோயால் 53 பேர் மரணம்

டெங்கு நோய் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 53 பேர் பலியாகியுள்ளதாக டெங்கு நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் 16 மாவட்டங்களில் டெங்கு நோய் அபாயம் நிலவுகிறது. கிண்னியாவிலேயே இதுவரையான காலாண்டில் அதிகமான டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வருடத்தையும் விட இந்த வருடம் டெங்கு நோயால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளன.

சுகாதார அமைச்சின் டெங்கு நோய் தடுப்புப் பிரிவின் மருத்துவர் பிரீலா சமரவீர கூறியுள்ளதாவது,

உயிரிழப்புக்களைப் போலவும், இந்த நோயால் பீடிக்கப்படுகின்ற நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த வருடத்தை விடவும் இந்த வருட முதல் காலாண்டில் 29 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்தம் 53 பேர் டெங்கு நோயால் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிகமானவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே பீடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, டெங்கு நோதயை தடுக்க சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்படும் கட்டடங்களில் கூரை பீலி அமைப்பது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று சப்ரகமுவ மாகாணசபை கட்டத்தொகுதியில் இடம்பெற்றபொதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

சப்ரகமவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் டெங்கு பரவும் மாவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளதால் இம்மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது.

கட்டடங்கள் மற்றும் வீடுகளில் கூரை பீலி அமைப்படுவதால் அதில் கழிவு நீர் தேங்கி வருவதன் காரணத்டால் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதால் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்படும் அரச கட்டடத்தொகுதிகள் மற்றும் வீடுகளில் கூரை பீலி அமைப்பதை சப்ரகமுவ மாகாண சபை முற்றாக தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]