டெங்கு ஒழிப்புக்கான வேலைத்திட்டம் – ராஜித்த சேனாரட்ன

சுகாதார அமைச்சு முன்னெடுக்கும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இவ்வருடத்தில் 33 ஆயிரத்து 151 டெங்கு நோயாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளார்கள். இதில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.டெங்கு

கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், களுத்துறை, குருநாகல், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய பன்னிரண்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது.

இந்த மாவட்டங்களில் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும். இதற்காக கல்வி அமைச்சின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]