டெங்குக் காய்ச்சல் காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன் மரணம்

டெங்குக் காய்ச்சல்

டெங்குக் காய்ச்சல் காரணமாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுவன் மரணம்

தீவிர டெங்குக் காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 வயதுச் சிறுவன் சனிக்கிழமை 13.01.2018 பிற்பகல் மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

ஏறாவூர் மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை (இல்மா வித்தியாலயம்) யில் 7ஆம் ஆண்டில் கற்கும் என். எம். எம். முஆத் (வயது 12) என்ற மாணவனே இவ்வாறு டெங்கு நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி மரணித்துள்ளார்.

இவர் ஏறாவூர் அல்முனீறா பெண்கள் உயர் தரப் பாடசாலை அதிபர் என்.எம். மஹாத் என்பரின் புதல்வராவார்.

கடந்த சில தினங்களாக இவர் காய்ச்சல் கண்டிருந்த நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலேயே சிகிச்சை பயனின்றி மரணித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]