டுபாயில் சிக்கிய இலங்கையர்கள்! நடிகருக்கு விளக்கமறியல் – நால்வர் விடுதலை

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பின் பிரிவினர் இணைந்து நடத்திய விசாரணையின் பின்னர் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் உட்பட ஐந்து பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கஞ்சா வைத்திருந்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]