டுபாயில் கைது செய்யப்பட்ட முக்கிய சகாக்கள்! வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட தகவல்

பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸ் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டதாக டுபாய் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

டுபாய் அரசாங்கத்தின் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் குறித்த 31 பேரும் கைது செய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை,மாகந்துரே மதூஸ் கைது செய்யப்பட்டமை மற்றும் அவரது பாதாள உலக குழு செயற்பாடு தொடர்பில் விவாதிப்பதற்கான நாள் ஒன்றை ஒதுக்குமாறு ஜே.வீ.பி சபாநாயகரை கோரியுள்ளார்.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் த ஜயதிஸ்ஸ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அடுத்த கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போது இதற்கான தினத்தை ஒதுக்கி தருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]