டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட அப்ரிடி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அதிரடி கைது!

பாதாள உலககுழுவின் தலைவர் மாக்கந்துரே மதூஷூடன் டுபாயில் கைதாகி நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படட மொஹமட் அப்ரிடி என்பவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் கஞ்சிபான இம்ரானின் மனைவியினது மூத்த சகோதரியின் மகன் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அவருடன் நாடுகடத்தப்பட்ட 50 வயதான பியால் புஸ்பகுமார ராஜபக்ஷ என்பவர், குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் தொடர்ந்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]