டி20 தொடரில் இருந்து டோனி நீக்கப்பட்டதற்கு காரணம் இதுதான்! விளக்கமளித்த கோஹ்லி

மேற்கிந்திய தீவு மற்றும் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான T20 தொடரில் ரிஷப் பாண்டிற்கு வாய்ப்பளிக்கவே டோனி நீங்கப்பட்டார் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

டோனியின் துடுப்பாட்டம் சிறப்பாக இல்லாவிட்டாலும், அவருடைய கீப்பிங் மற்றும் அனுபவம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை கொடுத்துள்ளது. எனவே டோனி இந்திய அணிக்கு தேவை என பல முன்னணி வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த கோஹ்லி, T20 தொடரில் டோனி தேர்வு செய்யப்படாமைக்கான காரணம் குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டனர் என்று நினைக்கிறேன்.

அணியிலிருந்து நீக்குவதற்கு முன்பு, தேர்வாளர்கள் முதலில் டோனியிடம் பேசியிருப்பார்கள். டோனி சம்பந்தமாக தேர்வாளர்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பில் பல விதமான கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை உண்மை இல்லை என்பதை உறுதியாக கூறுகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]