டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் உதவித்திட்டங்கள்

டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் உதவித்திட்டங்கள்

டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின்
டி.எஸ்.சேநாயக்க கல்லூரியின்

கொழும்பு டி.எஸ்.சேநாயக்க கல்லூரி யின் பழைய மாணவர் சங்கத்தினரால் யாழ் மாவட்டத்தில் வறுமை கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கொழும்பு டி.எஸ்.சேநாயக்க கல்லூரி யின் பழைய மாணவர் சங்கத்தினர் இந்த உதவித்திட்டங்களை வழங்கியுள்ளனர்.

யாழ் அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏழு தசம் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட 120 வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களான துவிச்சக்கரவண்டிகள் புத்தகப்பைகள் காலணிகள் என்பன வழங்கப்பட்டதுடன் பாடசாலையின் கணினிப்பிரிவுகளிற்கு கணினிகளும் வழங்கப்பட்டது.

கொழும்பு டி.எஸ்.சேநாயக்க கல்லூரி யின் பழைய மாணவர் சங்க தலைவர் சுசந்த திஸ்ஸநாயக்க யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன கெட்டியராட்சி உள்ளிட் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]