டிடி (Dhivyadarshini) விவாகரத்து கேட்டு மனு

பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தனது கணவரிடம் விவாகரத்து கோரிசென்னை குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு பதிவு செய்துள்ளார்.

டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திவ்யதர்ஷினிக்கும்(டிடி) அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.

 

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. ‘நம்ம வீட்டு கல்யாணம்’, ‘காஃபி வித் டிடி’ போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.

DD divorce

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.

ஆகவே டிடி எதிர்ப்பார்த்தபடி உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]