டிச.5 தமிழகத்திற்கு இருண்ட நாள்: முதல்வர் பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆவது நாள் கூட்டம் இன்று காலை கூடியதும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி இரங்கல் தீர்மானத்தை முதல்வர் பன்னீர்செல்வம் அவையில் முன்மொழிந்து பேசுகையில், ஜெயலலிதா இறந்து விட்டாலும், அவர் செய்த நற்காரியங்களால் மக்கள் மனதில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், மக்களவை உறுப்பினராக அவர் இருந்தபோது, இந்திரா காந்தியால் பாராட்டப்பட்டவர் என்றும் புகழாரம் செலுத்தினார்.
Panneerselvam
  மேலும், ஜெயலலிதா மறைந்த டிச.5 தமிழகத்திற்கு இருண்ட  நாள் என்றும், உலக தமிழர்களை நிலைகுலைய வைத்த நாள் என்றும் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். இது தொடர்பாக அவையில் பேசிய ஸ்டாலின், எதற்கும் அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ள கூடியவர் ஜெயலலிதா என்றும், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க வை ஆளும் கட்சி அந்தஸ்து வரை உயர்த்தியவர் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார்.