டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று 3 ஆயிரம் கோடி; வாங்கியவர் யார் தெரியுமா?

டாவின்சி யின் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று 3 ஆயிரம் கோடி; வாங்கியவர் யார் தெரியுமா?

ரியாத்: டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியம் ஒன்று 3 ஆயிரம் கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது. அந்த ஓவியம் மிகவும் புகழ்பெற்ற பழைய ஓவியம் ஆகும். அந்த ஓவியத்தை வாங்குவதற்காக உலகின் பல நாடுகளில் இருக்கும் பணக்காரர்களும் , கோடீஸ்வரர்களும் காத்து இருந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த ஓவியம் ஏலத்திற்கு வராமல் போனது. தற்போது சரியாக ஒருமாதம் முன்பு அந்த ஓவியம் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் தற்போது யார் அந்த ஓவியத்தை வாங்கியது என்று தகவல் வெளியாகி உள்ளது.davinci saudi

davinci saudi

டாவின்சி புகழ்பெற்ற ஓவியம் டாவின்சி வரைந்ததிலேயே மோனலிசா ஓவியம் தான் மிகவும் புகழ்பெற்ற ஓவியம் என்ற பெயர் பெற்று இருக்கிறது. ஆனால் அதே சமயத்தில் அவர் வரைந்த இன்னும் 19 ஓவியங்கள் அதே போல புகழோடு இருக்கிறது. அந்த ஓவியங்களில் ஏதாவது ஒன்றை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ள முடியாதா என பலர் நினைத்துக்கொண்டு உள்ளனர். அதில் முக்கியமான ஒரு ஓவியம் தான் ‘சால்வெட்டார் முந்தி’. இயேசுவின் ஓவியமான இது மிகவும் புகழ் பெற்றது.

இளவரசராக முடிசூடியுள்ள முகமது பின் சல்மான் அந்த ஓவியத்தை வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அந்த குடும்பத்தின் வங்கி கணக்கில் இருந்து பணம் இவர்களுக்கு வந்து இருக்கிறது. இதையடுத்து கடந்த ஒருமாதமாக இருந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது. ஆனால் ஒரு ஓவியத்திற்கு 3 ஆயிரம் கோடியா என பலரும் ராஜ குடும்பத்தை கேள்வி கேட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]