டாப்ஸிக்கு இந்த இந்தி நடிகரை திருமணம் செய்யதான் ஆசையாம்!

‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் ‘காஞ்சனா 2’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் டாப்ஸி.  இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டாப்ஸியிடம் நடிகர்களில் திருமணம் செய்தால் யாரை திருமணம் செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த டாப்ஸி, வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான, விக்கி  கௌஷல் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]