டாக்டர் அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்

டாக்டர் அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய். தமிழ்நாட்டையே உலுக்கிப்போட்ட நிகழ்வுதான் அனிதாவின் தற்கொலை. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றவர்தான் டாக்டர் அனிதா. இவ்வாறான துணிச்சல் மிகுந்த பெண்ணின் தற்கொலை தமிழ்நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

டாக்டர் அனிதாவின்

பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரைத்துறையினர் எனப் பலதரப்பட்டோர் இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர். விஜய் பொதுவாகவே இரக்க குணம் உள்ளவர். யாரும் எதிர்பார்த்திரவண்ணம் அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அனிதாவின் தந்தைக்கு தனது இரங்களையம் ஆறுதலையும் தெரிவித்துள்ளார் விஜய்.

டாக்டர் அனிதாவின்

இவரின் இச்செயல் அனைவரிடமும் விஜய் மீதான நன்மதிப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. விஜய் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இவரைப்போன்று நடிகர்கள் சிலரே திரையுலகில் உள்ளனர். நான் நடிக்கிற வேலையை மட்டும்தான் பார்ப்பேன் எனும் திரையுலகத்தினர் மத்தியில் விஜயின் இச்செயல் பாராட்டுக்குரியது தான்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]