டயலொக் பாவனையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

டயலொக் downநாடெங்கிலும் உள்ள டயலொக் நெட்வொர்க்குகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக , நிறுவனம் சிறிது நேரத்திற்க்கு முன்பு உறுதிப்படுத்தியது.

நாடெங்கிலும் உள்ள டயலொக் பயனர்கள் சமிக்ஞை வேலை செய்யவில்லை என்று புகார் செய்துள்ளனர். நெட்வொர்க்கில் உள்ள மற்ற எண்களுக்கு அழைப்புகள் ஏற்ட்டப்படுத்துவதில் சிரமம் எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தனர்.

நிறுவனத்தின் பொது தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​டயலொக் ஊழியர் தங்களது நெட்வொர்க் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக உறுதி செய்தார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நெட்வொர்க்கின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது , இது குறைந்த பட்சம் இரண்டு மணி நேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]