ஞானசார தேரர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர்

ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உடல்நலக் குறைவால் ஞானசாரரால் மன்றில் ஆஜராக முடியவில்லை என அவர் தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனையடுத்து வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அண்மையகாலமாக ஏற்பட்டுவரும் இனவாதச் செயற்பாடுகளுக்கு பின்புலத்தில் பொதுபலசேனா அமைப்புதான் செயற்படுவதாக முஸ்லிம் தலைமைகள் சுட்டிக்காட்டி வருவதுடன், ஞானசார தேரரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]