ஞானசார தேரர் சத்திர சிகிச்சையின் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சத்திர சிகிச்சையின் பின்னர், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்பது உட்பட அவர் மீது சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணையின் அப்படையில் ஞானசார தேரர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரர்

இதனையடுத்து நீதிமன்றம் ஞானசார தேரருக்கு 19 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததுடன், அதனை 6 வருடங்களில் அனுபவித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]