ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கினை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்திரவிட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அத்துமீறி உள்நுழைந்து அங்கிருந்த உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]