ஞானசார தேரருக்கு பிடியாணை!

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மூலம் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் குரோதத்தை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்டிருக்கும் வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]