ஞானசார தேரருக்கு அறுவை சத்திரசிகிச்சை

ஞானசார தேரருக்கு அறுவை சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அறுவை சத்திரசிகிச்சை நடைபெறவுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8 ஆம் திகதி ஞானசார தேரர், அறுவை சிகிச்சை ஒன்றினை மேற்கொள்வதற்காக ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இருப்பினும் அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காணப்பட்டமையினால் அறுவை சிகிச்சை பிறபோடப்பட்ட நிலையில், தற்போதைய நிலையில் ஞானசார தேரருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடியுமெனவும் இதனால் இன்றைய தினம் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வைத்தியர்கள் தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியசாலையில் மேலதிக பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]