ஞானசார தேரரின் தண்டனைக்கு எதிரான மேன் முறையீட்டு மனு ஒத்திவைப்பு

ஞானசார தேரரின் தண்டனைக்கு எதிரான மேன் முறையீட்டு மனு ஒத்திவைப்பு

ஞானசார தேரரின் தண்டனைக்கு எதிரான மேன் முறையீட்டு மனு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்துள்ள மனு நேற்று (வெள்ளிக்கிழமை) ஈவா வனசுந்தர, விஜித் மலல்கொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், குறித்த மனு மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், நீதியரசர்கள் குழாம் சரியாக ஒழுங்கமைக்கப்படாமையால் மனுவை ஒக்டோபர் 05ம் திகதி வரை பிற்போடுவதாகவும் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதனடிப்படையில், அவருக்கு கடுமையான உழைப்புடன் 06 வருடங்களில் அனுபவிக்கும் வகையில் 19 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]