தொடர்ச்சியாக 11 அரைச்சதங்கள் – ஜோ ரூட் சாதனை

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 அரைச் சதங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் தமதாக்கியுள்ளார்.
இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதில் முதலாவது இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் 136 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்தப் போட்டியில் அரைச் சதம் கடந்ததையடுத்து, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 11 அரைச்சதங்களைப் பெற்ற இங்கிலாந்து வீரர் என்ற சாதனைக்கு ஜே ரூட் சொந்தக்காரரானார்.
இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்எகளில் அடுத்தடுத்து அதிக அரைச்சதங்களைப் பெற்றவர்களின் பட்டியலில் ஜோ ரூட் 6 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் 12 அரைச்சதங்களைப் பெற்று தென்னாப்பிரிக்க வீரர்  ஏ.பி.டி.வில்லியர்ஸ் முதல் இடத்தில் உள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக 11 அரைச் சதங்களுடன் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஐ.வி.ஏ. ரிச்சர்ட்ஸ், இந்திய அணியின் கௌதம் கம்பீர் மற்றும் விரேந்திர ஷேவாக், பாகிஸ்தானின் மிஸ்பா ஹுல்-அக் ஆகியோர் முறையே 2ஆம், 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் உள்ளனர்.
இதேவேளை, ஜோ ரூட்டுக்கு அடுத்ததாக 10 அரைச்சதங்களுடன் இங்கிலாந்து அணி வீரர் ஜோன் எட்ரிச் (ஓய்வு) 7 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.