முள்ளிவாய்க்காலில் சுடரேற்றிய ஜோன் ரெறி

கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகர மன்றத் தலைவர் ஜோன் ரெறி முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்துள்ளார்.

முள்ளிவாய்க்காலுக்குப் பயணம் செய்த அவர் அங்கு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரில் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தியுள்ளார்.

அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டகளத்திற்கு சென்று போராட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த பயணத்தின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

 ஜோன் ரெறி

 ஜோன் ரெறி  ஜோன் ரெறி  ஜோன் ரெறி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]