ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக முறைப்பாடு

ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜோன் அமரதுங்கவினால் அச்சறுத்தப்பட்ட ஊடகவியலாளர் பெனட் பேர்டினன்டஸ் இந்த முறைப்பாட்டை இன்றைய தினம் பதிவுசெய்துள்ளார்.

முத்துராஜவல பகுதியில் குப்பைக்கூழங்களை சேர்த்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு, அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் கந்தானை பிரதேச கட்சி அலுவலகத்தில் கடந்த 8 ஆம் திகதி நடைபெற்றது.

ஏற்கனவே அப்பகுதியில் குப்பைகளை குவித்த விவகாரத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க மீது பிரதேச மக்கள் அதிருப்தியாகியுள்ள தருணத்தில் எவ்வாறு அதே பிரதேசத்தில் குப்பைகளை சேர்க்க முடியுமென இந்த சந்திப்பின் பின்னர் அங்கிருந்து திரும்பிய அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரான பெனட் பேர்டினன்டஸை அமைச்சர் திட்டியதோடு, பகிரங்கமாக அச்சுறுத்தலையும் விடுத்தார். மேலும் குறித்த கட்சி அலுவலகத்திலிருந்தும் ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெற்ற தினமே பேலியகொட பொலிஸ் நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் இதுதொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எவரும் எடுக்காத நிலையில் இன்றைய தினம் ஊடகவியலாளர் பெனட் பேர்டினன்டஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]