ஜோதிடத்தின் படி இவர்களுக்கு தான் நகைச்சுவை உணர்வு அதிகமாம்!

ஜோதிடத்தின் படி யாருக்கு நகைச்சுவை உணர்வுக்கும் அதிகமாக இருக்கும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவருடைய ஜாதகத்தில் ஜனரஞ்ஜக ராசியான சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாம் லக்னமாக அமைந்து லக்னத்தில் சுக்கிரன், சந்திரன், புதன், இணைந்து அல்லது திரிகோணஸ்தானங்களில் நிற்பது.

கால புருஷ மூன்றாம் இடமான மிதுன ராசி லக்னமாகி லக்னத்தின் புதன் ஆட்சி பெற்று திரிகோணஸ்தானமான துலாம் ராசியில் சுக்கிரனும், சந்திரனும் இணைந்து நிற்பது.

காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் லக்னமாகி, இவற்றோடு சந்திரன், புதன், சுக்கிரன் தொடர்பு கொள்வது.

புதன் கன்னி ராசி லக்னமாகிலக்னத்தில் புதன் உச்சம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் நின்று மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று நிற்பது.

பொதுவாகவே எந்த ராசி லக்னமானாலும் சந்திரன், புதன் சுக்கிரன் ஆட்சி பெற்று தொடர்பில் நிற்பது.

ஜாதகத்தில் புத்திரகாரகன் புதனுக்காக பத்ர யோகம் பெற்று நிற்பது மற்றும் சுக்கிரனின் மாளவியா யோகம் பெற்று நிற்பது.

மிதுனம் மற்றும் துலாம் ராசிகளில் ராகு நின்று தனது திரிகோண பார்வையால் இரண்டு காற்று ராசிகளுக்கு தொடர்பை ஏற்படுத்துவது.

மேற்கூறப்பட்டுள்ள தொடர்புகள் ஜாதக அமைப்பில் இருந்து அவற்றோடு 6-8-12 தொடர்புகள் இருந்தாலோ அல்லது பாதகாதிபதிகள், திதி சூன்ய ராசி அதிபதிகள் தொடர்பு பெற்றுவிட்டால் அவர்களில் சிலர் அழுவர்கள், சிலர் சிரிக்கும் குணத்தை பெறுவார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]