முகப்பு News ரொஜர் வெற்றிக்கிண்ண டெனிஸ் போட்டியில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்

ரொஜர் வெற்றிக்கிண்ண டெனிஸ் போட்டியில் ஜோகோவிச் தோல்வியடைந்தார்

கனடாவில் நடைபெற்று வரும் ரொஜர்ஸ் வெற்றிக்கிண்ண டெனிஸ் போட்டியின், ஆண்களுக்கான கால் இறுதி போட்டிக்கு முன்னரான சுற்று போட்டி ஒன்றில் சேர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச் (Novak Djokovic) தோல்வியடைந்துள்ளார்.

13 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றிக்கிண்ணத்தை பெற்ற இவரை 19 வயதான ஸ்டீபனோஸ் சிற்ரிஸ்பஸ் (Stefanos Tsitsipas)வெற்றி பெற்றுள்ளார்.

முதலாவது செட்டை 6-3 என்ற கணக்கில் அவர் வெற்றி பெற்றார்.

இரண்டாவது செட்டில் இருவரும் சிறந்த முறையில் விளையாடி ‘ரை பிரேக்கர்’ வரை நீடித்தது.

எப்படியிருப்பினும், ஜோகோவிச் அந்த போட்டியில் வெற்றி பெற்றார்.

வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை ஸ்டீபனோஸ் 6-3 என்ற கணக்கில் ஜோகேவிச்சை வெற்றி கொண்டார்.

இதன் அடிப்படையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்டீபனோஸ் முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com