ஜே.வி.பி வேட்பாளர்களின் தேசிய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

ஜே.வி.பி வேட்பாளர்களின் தேசிய மாநாடு கொழும்பில் ஆரம்பம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கான மாநாடு கொழும்பில் தற்போது இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிடும் சகல உறுப்பினர்களையும் இன்றறைய தினம் கொழும்பில் ஒன்று கூடுமாறு அக்கட்சி விடுத்த அழைப்புக்கமைய இவர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

குறித்த மாநாடு இன்று (17) காலை 9.30 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.