ஜே.வி.பியின் பிரேரணைக்கு மஹிந்த அணி எதிர்ப்பு

மக்கள் விடுதலை முன்னணியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிட ஒன்றிணைந்த எதிரணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவருடைய இல்லத்தில் ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்களுடன் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்ததின் ஊடாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கப்படுவதாக, பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அதற்கு எதிராக வாக்களித்து தோல்வியடை செய்ய இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]