ஜேர்மனி பொது தேர்தல் வாக்குப் பதிவுகள் நேற்று இடம்பெற்றது.
இந்த தேர்தல், ஜேர்மனி, தலைவர் அன்கெலா மேக்கலுக்கு ஒரு பரிசோதனை தேர்தலாக அமைவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் கடந்த 12 வருடங்களாக ஜேர்மனியின் தலைமைப்பொறுப்பில் இருந்தமையால் அவரின் பதவி தொடர்ந்தும் தக்க வைக்கப்படும் என பிறிதொரு செய்தி தெரிவிக்கின்றது.
அன்கெலா மேக்கலுக்கலின் கத்தோலிக்க ஜனநாயக கட்சியினை தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்கும் நோக்கில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜேர்மனி நாடாளுமன்றத்தில் அதிக பலத்தை அவரது கட்சி கொண்டுள்ள நிலையில், இந்த தேர்தலிலும் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2005ஆம் ஆண்டு முதல்ஜேர்மனி தலைவராக செயல்படும் அவர் சர்வதேச அகதிகளுக்கு ஜேர்மனியினை திறந்து விட்டார் என ஜேர்மனியர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும், தற்போது அந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் மீண்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, மாட்டின் ஸ்சுல்ஸ், அன்கெலா மேக்கலுக்கு சவாலாக விளங்குபவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மாட்டின் ஸ்சுல்ஸ் முன்னர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவராக கடமையாற்றியவர்.
இந்த தேர்தலில் ஆறு கோடியே 15 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியினை பெற்றுள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]