ஜேம்ஸ் பீரிஸின் விருதைத் திருடிய நால்வர் கைது

காலஞ்சென்ற பிரல இயக்குநர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டிலிருந்து விருதைத் திருடிய நான்கு பேரை பம்பலப்பிட்டி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் என பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

விசேட நிகழ்வுகளில் புகுந்து சனநெருக்கடியான வேளையில் “பிக்பொக்கெட்” அடிப்பது தமது வழமையான தொழில் என சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

லெஸ்டர் ஜெம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரியைகளின் போது, அவரது வீட்டிலிருந்த அலைபேசி ஒன்றும், அரசியல்வாதியொருவரின் பணப் பை ஒன்றும் இவர்களினால் திருடப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சந்தேகநபர்கள் கடுவெல, மதுகம, நாவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்யது.