ஜெயலலிதா மரண விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அப்பலோ மருத்துவமனை விளக்கம்

ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பில் உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அப்பலோ மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

ஜெயலலிதா மரண தொடர்பில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், அப்பலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் பொறுப்பாசிரியர் ஆனந்தன் ஆகியோர், நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணை ஆணையத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது விசாரணை ஆணையத்தால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்த அப்பலோ வைத்திய நிர்வாகி, ஜெயலலிதா மரண விசாரணை தொடர்பில உரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டி இருந்ததாலேயே சரியான நேரத்தில் ஆஜராக முடியவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையை சேர்ந்த 33 பேர் இதுவரை ஆணையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், தேவையான மருத்துவமனை ஆதாரங்களையும் சரியாக சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

அப்பலோ மருத்துவர்கள் உரிய நேரத்தில் ஆஜராகவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையம் நேற்று காலை  விடுத்திருந்த அறிக்கையை தொடர்ந்தே அவர் மேற்படி விளக்கமளித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]