‘அருணின் தற்கொலை’யில் சந்தேகம்வுள்ளதாக தந்தை குற்றச்சாட்டு!!

ஜெயலலிதா நினைவிடத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அதிகாலை ஆயுதப்படை காவலர் அருண் ராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்டவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் உயிரிழந்தார்.

தற்கொலை செய்து கொண்ட அருணின் உடலில் இருந்து வெளியேறிய தோட்டாவை காணவில்லை. அந்த தோட்டாவை வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அருண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அருண் தற்கொலை செய்துகொண்ட இடத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் அருணின் தந்தை மலைராஜா கூறுகையில்,” நேற்று இரவு பணிக்குச் செல்லும் முன்பு எனது மகன் போனில் நன்றாகத்தான் பேசினார். உறவினர்கள் பற்றியெல்லாம் விசாரித்து மகிழ்ச்சியாக பேசியபின் போனை வைத்தார். அருண் தற்கொலையில் சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்யும் மனநிலையில் இல்லை. என் மகனின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]