ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணை

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரண விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வைத்தியர்கள் ஆஜராகியுள்ளனர்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையகத்தில் ஆஜராகும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் இன்று (வியாழக்கிழமை) விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அப்பலோ மருத்துவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றார் என்பதன் அடிப்படையில், குறித்த வைத்தியசாலை வைத்தியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24 -ஆம் திகதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். முதல்கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என இதுவரை 30 -க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]