ஜெயலலிதாவின் சொத்துக்களை பராமரிக்க வேண்டியவர்கள் யார்? நீதிமன்றத்தின் தீர்ப்பு!

மறைந்த ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.913 கோடி. இவரின் சொத்துக்களை பராமரிக்க கோரிய வழக்கில் தீபா, தீபக் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது.

சென்னை கே.கே.நகரை சேர்ந்த அதிமுக நிர்வாகி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மறைந்த ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன.

ஐதராபாத்தில் திராட்சை தோட்டம், வீடு, சென்னை போயஸ் கார்டன் வீடு, கொடநாடு எஸ்டேட் என்று சுமார் ரூ.913 கோடிக்கு மேல் சொத்து உள்ளது. இந்த சொத்துக்கள் யாருக்கு என்று ஜெயலலிதா உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை. அதனால், இந்த சொத்துக்களை எல்லாம் நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன். இந்த வழக்கை தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் உள்ளதால், இந்த சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து புகழேந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் ஆகியோர் இன்று விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்கா பிறப்பித்த தீர்ப்பில் அந்த சொத்துக்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பல இடங்களில் ஏராளமான சொத்துக்கள் அவர் பெயரில் உள்ளது. அதேநேரம், அவரது வாரிசு என்று தீபா, தீபக் என்று இருவர் உள்ளனர். எனவே, இந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று தீபா, தீபக் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தர விட்டு வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]