முகப்பு Cinema ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ்

ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ்

நடிகை சாவித்திரி வேடத்தில் ‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவருக்கு ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.

அந்தவகையில், அடுத்து என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்றிலும் சாவித்திரி வேடத்தில் நடிக்கவுள்ள இவரிடம் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பீர்களா? கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள கீர்த்தி ‘ஜெயலலிதா அவர்களின் வரலாற்றுப் படத்தைத் தயாரிப்பது மட்டுமில்லாமல் அந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என்பது கடினமான மற்றும் சவாலான விஷயம்.

எனக்கு அந்த அளவுக்குத் தைரியம் இல்லை. அதனால் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com