ஜெயம் ரவி பொலீஸாக நடிக்கும் ‘அடங்க மறு’ ஃபர்ஸ்ட் லுக்

சக்தி சவுந்தர் ராஜனின் ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு பிறகு ‘ஜெயம்’ ரவி, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘ஹோம் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இது ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் 24-வது படமாம்.

இதில் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா டூயட் பாடி ஆடி வருகிறார். இப்படத்தில் ரவி போலீஸாக வலம் வரவுள்ளார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இதற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

ஜெயம் ரவி பொலீஸாக நடிக்கும் ஜெயம் ரவி பொலீஸாக நடிக்கும் ஜெயம் ரவி பொலீஸாக நடிக்கும் ஜெயம் ரவி பொலீஸாக நடிக்கும்

 

 

தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை ‘ஜெயம்’ ரவி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மிரட்டலான இந்த போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]