ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ திரைப்பட ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது!

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ திரைப்பட ரிலீஸ் பற்றிய தகவல் வெளியானது!

கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் ஜெயம் ரவி  நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடங்க மறு’

இந்த படத்தில் ஜெயம் ரவி பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் மேற்கொள்கிறார்.

சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படம் எதிர்வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ள நிலையில், நடிகை ராஷி கண்ணா நவம்பர் கடைசி வாரத்தில் படம் ரிலீசாகும் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]