ஜெயம் குடும்பத்தின் பில்லர்ஸ் இவர்கள் தான் – முதல்முறையாக தனது குடும்ப பெண்களின் பகைப்படத்தை பதிவிட்ட ஜெயம் ரவி!

“ஜெயம்” படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியவர் ஜெயம் ரவி. இவர் இதுவரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் என்பதும் நமக்கு தெரியும். ஆனால், ஜெயம் ரவிக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. அவருடைய பெயர் ரோஜா மோகன். அதே போல அவரது அக்காவின் புகைப்படத்தை பல பேர் பார்த்திட வாய்ப்பும் இல்லை.

ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகிவிட்டார்.

இந்நிலையில் தற்போது, ஜெயம் ரவி தனது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயம் குடும்பத்தின் பில்லர்ஸ் இவர்கள் தான் என பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]