ஜெனிவா விவகாரம் சூடுபிடிப்பு

ஜெனிவா விவகாரம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு தொடங்கவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூதுவரின் பணியகத்தில் நேற்று (16) காலை நடந்த இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 26 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார். இதன்போது, இம்மாதம் தொடங்கவுள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என்பதால், அது தொடர்பான நகர்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பிந்திய அரசியல் நகர்வுகள், அதனால், நல்லிணக்க செயற்பாடுகளில் ஏற்படக் கூடிய தாக்கங்கள், குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

“தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணம் காட்டி, அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்குவதற்கு, அனைத்துலக சமூகம் .இடமளிக்கக் கூடாது. ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும்” என்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கோரிக்கை விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]