ஜெனிவா வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம்

ஜெனிவாவில் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது என்று ஜேர்மனி இலங்கை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான ஜேர்மனித் தூதுவர் ஜோன் ரோட் கொழும்பு ஆங்கில நாளிதழொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெனிவா வாக்குறுதிகளை

தான் அறிவித்த மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முன்நோக்கி நகர்த்துவதற்கு அரசியல் விருப்புடன் இலங்கை அரசு இன்னும் கவனம் செலுத்தவேண்டும்.

காணாமல் போனோருக்கான பணியகம், தகவல் உரிமைச் சட்டம், அரசமைப்புப் பேரவை என்பன வெற்றிகரமான நகர்வுகளாக இருக்கின்றன.

அதேவேளை, அதிகாரங்களைப் பகிரும் வகையில் அரசமைப்பு மறுசீரமைப்பு, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காணிகளை மீளளித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றியமைத்தல், ஊழலுக்கு எதிரான காத்திரமான நடவடிக்கை, தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை என்பன இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருக்கின்றன. என்றும் அவர் குறிப்பிட்டார்.

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]