நகைச்சுவை நடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞன் பலி

பிரபல நகைச்சுவை நடிகர் ஜெகனின் கார் மோதி வந்தவாசி அருகே இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஹூசைன். மினி லொரி ஓட்டுனரான இவர் வந்தவாசியில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்

அப்போது வந்தவாசி-காஞ்சிபுரம் அருகே நடிகர் ஜெகன் வந்த கார், இருசக்கரத்தில் சென்று கொண்டிருந்த ஹூசைன் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஹூசைன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சையின் பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]