ஜீ தமிழில் பாடி அசத்திய ரமணியம்மாள் தற்போதைய நிலை பற்றி தெரியுமா உங்களுக்கு??

2017 ம் ஆண்டு ஜீ தமிழ் நடத்திய ச.ரி.க.ம. பா நிகழ்ச்சியில் பாடிய ரமணியம்மாள் பாட்டியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டோம். வழமையான டீவி நிகழ்ச்சிகள் போல் தான் இதுவும் என நினைத்தவர்களுக்கு இல்லை இந்த நிகழ்ச்சி மாறு பட்டது என வியக்க வைத்தவர் ரமணியம்மா பாட்டி. 60 வயதை தாண்டியவர்கள் அமர்ந்து டீவி பார்க்கத் தான் சரி என கூறுவோருக்கு 60தை தாண்டி சாதிக்க முடியுமென நிரூபித்து காட்டினார். இவரது பாடல் திறமையை கண்டு நடுவர்கள் வியந்துபோனார்கள். அதே போல் கெஸ்ட்டாக வந்த திரை துறையை சார்ந்தவர்கள் தங்கள் திரைப்படங்களில்

பாட்டிக்கு வாய்ப்பு தருவதாக கூறினார்கள். ரமணியம்மாள் பாட்டி ஜீ தமிழ் நிகழ்ச்சியில் பாட வரும் போது வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். அவர் வேலை செய்து வேலை முடிந்து வரும் போது தனது மகன்களுக்கு உணவு வாங்கிச் செல்வதாக கூறி இருந்தார்.

இந்த நிலையில் போட்டி முடிந்த போது பாட்டிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது. தொடர்ந்து வீட்டு வேலை செய்வேன் என கூறியவரை சமாதானம் செய்த நடுவர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த சொன்னார்கள் இதனால் வீட்டு வேலையை விட்டு விட்டு முழு நேரமாக பாடுவது என முடிவு எடுத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என எதிர்பார்க்கப் பட்டார். ஆனால் விஜய் சேதுபதி மற்றும் விஷால் இருவருமே கொடுத்த வாக்கை காப்பாற்றினார்கள்,ஜூங்கா, மற்றும் சண்டைகோழி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள். அதன் பின் எந்த வாய்ப்பும் இல்லை.

கல்லூரி மேடைகள், கோயில் மேடைகள் அல்லது ஜீ தமிழின் நிகழ்ச்சி இப்படி ஏதாவது ஒன்று கிடைப்பதால் அன்றாடம் உணவுக்கு மீண்டும் கஷ்டமாம். அதனால் மறுபடியும் வீட்டுவேலை தேடுகிறார் ரமணி பாட்டி.. ! திறமைகளுக்கான மதிப்பு குறைவு தான்..!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]