நுவரெலியா நகர மத்தியில் ஜீப் விபத்து

ஜீப் விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டி இன்று காலை 7.30 மணியளவில் நுவரெலியா நகர மத்தியில் விபத்துக்குள்ளாகியது.

இதன்காரணமாக நுவரெலியா நகரத்திற்கு மூன்று மணித்தியாலங்கள் மின்சார தடை ஏற்பட்டிருந்தது.

குறித்த ஜீப் வண்டியில் பாடசாலை மாணவர்கள் இருவர் பயணித்த நிலையில், நுவரெலியா பூங்கா வீதியில் வைத்து ஜீப் சாரதிக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமா, வாகனம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு சென்ற ஜீப் எதிரே இருந்த அதிக வலு கொண்ட மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜீப் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு, நுவரெலியா நகரத்திற்கான மின்சார தடையும் ஏற்பட்டிருந்தது. இதனை சீர்செய்வதற்கான நடவடிக்கையில் மின்சார சபை ஊழியர்கள் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

எனினும்,விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]