ஜீன் 22ஆம் திகதி அரசியலில் களமிறங்கும் விஜய்?? சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

விஜயின் தந்தை எஸ்.ஏ.சியும் தளபதி விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என கூறி வருகின்றார். இந்நிலையில் தற்போது மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் ஜூன் 22-ல் தளபதி விஜய் அரசியல் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் இதனால் அரசியல் கட்சியினர் கலக்கத்தில் இருப்பதாகவும் விவசாயிகள் இதனை வரவேற்பதாகவும் அந்த போஸ்டரில் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]