ஜி.வி.யின் விர்ஜின் மாப்பிளை படத்தின் தலைப்பு மாற்றம்

ஜி.வி.பிரகாஷ், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்நிலையில் ஜி.வி.யுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படத்திற்கு விர்ஜின் மாப்பிளை என்று தலைப்பு வைத்திருந்தனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டனர்.

இதனிடையே ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பாலாவின் நாச்சியார் மற்றும் செம 4G, முதலான படங்களின் வேலைகள் முடிந்ததும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். இந்நிலையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிப் படமாக அமைந்ததால் விர்ஜின் மாப்பிள்ளை என்ற டைட்டிலுக்கு பதிலாக த்ரிஷா இல்லானா நயன்தாரா-2 என்று தலைப்பு வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.