2 1/2 வருடங்களே அரசுக்கு ஆயுட்காலம் : ஜி.எல். பீரிஸ்

இன்னமும் 2 1/2 வருடங்களே இந்த அரசின் ஆயுட்காலம் எஞ்சியுள்ளது என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிகாலம் 5 வருடங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டத்தின்படியே 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்புவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி வகித்தனர். ஆனால், 19ஆவது திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிகாலம் 2020 இல்  முடிவடைந்துவிடும்.

எஞ்சியுள்ள 2 1/2 வருடங்களைகூட இந்த அரசால் கொண்டுசெல்ல முடியாது என்பதே எமது வாதமாகும். மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. ஜனநாயம் என்று கூறி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர். உள்ளூராட்சிசபைகள் இல்லாமல் இயங்கும் அரசாக உள்ளது என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]