ஜிந்தோட்டை சந்தேக நபர்கள் 22 பேருக்கு பிணை

ஜிந்தோட்டை

காலி, ஜிந்தோட்டையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 22 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, தென் மாகாண உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

அதன்போது, நீதிபதி மஞ்சுல திலகரட்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு காலி நீதவான் நீதிமன்றத்தில் நாளை இடம்பெறவுள்ள நிலையில், சந்தேக நபர்கள் விடுவிக்கப்படுவது தொடர்பில் உத்தரவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 22 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]