ஜாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்று சாதித்த முதல் இந்திய பெண்!

பெண் ஒருவருக்கு ஜாதி, மதமற்றவர் என தமிழக அரசு சான்றிதழ் வாங்கியுள்ளார்.

தமிழ்நாடு- வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் சினேகா(21). இவருக்கு சிறு வயது முதலே ஜாதி, மதம் பிடிக்காதாம். இவர் தனது ஜாதி, மதத்தின் பெயரை குறிப்பிடாமலேயே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார்.

இவரை போன்றே ஜாதி, மதத்தின் மீது நாட்டமில்லாத ஒருவரையே திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தாம் ஜாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கும்படி சிநேகா திருப்பத்தூர் தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார். முதலில் முடியாது என கூறியுள்ளனர்.

பல்வேறு போரட்டத்திற்கு பின் திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி சிநேகா ஜாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி மதமற்றவர் என்று அரசு சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழ்மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]