ஜல்லிக்கட்டு விவகாரம்: மத்திய அரசிடம் பணிந்தது உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றப்படும் என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, அதற்கான சட்ட நடவடிக்கைகளில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்த நேரத்தில், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.

  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளித்த மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நிர்வாக ரீதியான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானால், அது பல சிக்கல்களை உருவாக்க கூடும், எனவே, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒரு வார காலத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதனிடையே, மத்திய அரசின்  கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒரு வார காலத்துக்கு ஒத்தி வைப்பதாக கூறியுள்ளது.