ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் இன்று லேசான நில அதிர்வு

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் இன்று லேசான நில அதிர்வு

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவின் ஜஜ்ஜார் ஆகிய மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

அந்தவகையில், ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்திலும் இன்று காலை 5.43 மணியளவில் குறித்த நில அதிர்வு உணரப்பட்டதுடன், இது 3.1 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

இதேபோல் ஜம்மு காஷ்மீரில் இன்று காலை 5.15 மணியளவில் ஏற்பட்ட லேசான நில அதிர்வு 4.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.

இருப்பினும் இந்த நில அதிர்வுகளினால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாகவே டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அயல் நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக இங்கு லேசான நில அதிர்வு உணரப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]